Saturday, February 21, 2009

என் மகன்


புவியில் கிடைத்த புகழே! கவிதைத் தழும்பும் அழகே!
எங்கோ தேடிய அமைதியை உன்னில் ஏந்தி வந்தாயோ!
உனது விழிகளில் ஒளிர்வது அகத்தின் வெளிச்சம் அல்லவா
அவ்வொளியின் வழியே தெரிவது அழியா அமைதியென சொல்லவா
என்ன சொல்லி உனை அழைப்பேன் கண்ணே! மணியே! என்று அழைத்தாலும்
அன்பே! அருளே! என உரைத்தாலும் என் மொழி உன் மொழியாகிடுமோ
உயிரே நீதான் மூன்றாம் வரம் உன் தாயும் தமக்கையும் முன் வரம்
இமையொகு பொழுதும் இந்த இனிமை பிரியாமை நான் யாசிக்கும் நான்காம் வரம்
இதழ்களின் புன்னகையை உன் இதயம் சிரிப்பதாய் உணர்கின்றேன்
நிலையொன்று வந்து விடின் உன் கால்கள் நடந்து துவளும் உன் கண்கள் மூடி துயிலும்.
பிஞ்சு மொழி நீ பேசுகையில் என் நெஞ்சம் அதை அசை போடும்.
மழலையாய் என் மனம் மகிழ்ந்திருக்கும் மகனே நீயும் மடியுரங்கு.

No comments: