Thursday, December 27, 2007

என் மகள்

எழுச்சியோடு இந்த பிள்ளை
என்னை பார்க்கிறாள்

மகிழ்ச்சியோடு காலைப் பொழுதில்
வந்து சிரிக்கிறாள்

வாஞ்சையாக பல நேரம்
கொஞ்சி பேசுவாள்

மொழி ஒன்றும் புரியவில்லை
பதிலைக் கேட்கிறாள்

விடையாக ஏதும் இல்லை
என்று உணர்கிறாள்

விலையாக கோபத்தோடு
கடி கடிக்கிறாள்

கன்னத்தோடு கன்னம் சேர்த்து
அன்பை பொழிகிறாள்

கனப்பொழுதில் மனம் மாறி
கடிந்து பேசுவாள்

அந்தி நேரம் வந்தவுடன்
ஆட்டம் போடுவாள்

ஆடவேண்டும் துணைக்கு என்று
கூட அழைக்கிறாள்

எனது ஆட்டம் சிறிது மட்டம்
என்று உணர்கிறாள்

ஏளனமாய் மெல்ல சிரித்து
அமரச் செய்கிறாள்

தூங்க வேண்டும் என்று சொன்னால்
மூக்கு சிவக்கிறாள்

தூங்கிவிட்டால் அருகிலிருந்து
வியக்க வைக்கிறாள்.
- சைமா

6 comments:

Unknown said...

அட்டகாசம் சைமா! அருமை, களத்தில் இறங்கி விட்டீர்! நல்லா கலக்குங்க.
- இளங்கோ.

Unknown said...

ANNA SUPERB....ROMBA NALLA IRUKKU...VERY TRUE ABT CATHY.. ENAKKU ROMBA PIDICHIRUKKU

சைமா said...

Thanks Thangachi.

சைமா said...

நன்றி இளங்கோ, நலமா?

Bharani Raj said...

dei machee ivalo naal onnumae sollala blogs pathi yean do you think we will not be reading this master piece, man bring out more

சைமா said...

லக்கி ஸ்டார், please dont tell me its master piece, i wanted to tell you earlier. But let this be a surprise man. thanks for everything.