Monday, February 23, 2009

“ஹைக்கூ”வல்

அதிகாலை பனித்துளி

- சோர்விலா வேளையின் வியர்வை, பூக்கள் மீது!


சுயநலம்

- கூட்டமான பேருந்தில் தேடும், ஜன்னலோர இருக்கை.


ஆட்டோ

- மூன்று சக்கரத்தில் இயங்குவதால் அவன் சொல்லும் விலைக்கும் மூன்று கால்.

கருப்பு கண்ணாடி

- கண்களை பாதுகாப்பதாய் நினைந்து இவன் பார்வையை பாழாக்குகிறான்.

சுவாசம்

- தூய்மையாய் உள் சென்று வெளியேறும் தீமை.

அஞ்சலி

- கரங்கள் இணைய, இமைகள் பணிக்க, இதயம் சொல்லிடும் நன்றி

இதயம்

- செய்யும் செயலுக்கு இல்லை பாராட்டு! செய்யா காதலின் சின்னமாம்.

நிழல்

- என்னை அறியாமல் என்னைத்துரத்தும் ‘நான்’

பசி

- அறிவுக்கெட்டினாலும் ஆற்ற முடியா துயர்.

3 comments:

Unknown said...

கருப்பு கண்ணாடி நச் என்று இருந்தது சைமா உன்னை அறிந்தவர்க்கு உன் கவிதைகளின் அர்த்தம் புரியும்.

Bharani Raj said...

its really making me to feel the past, post more my friend

சைமா said...

Thanks Lucky Star என்னடா பெயர் இது?